search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முண்டந்துறை புலிகள் காப்பகம்"

    • களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனஉயிரின கணக்கெடுப்புப்பணி 8 நாட்கள் நடைபெறுகிறது.
    • செல்போன் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு பணி குறித்து உயிரியலாளர் ஸ்ரீதர் மற்றும் ஆக்னஸ் பயிற்சியளித்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனஉயிரின கணக்கெடுப்புப்பணி 8 நாட்கள் நடைபெறுகிறது.

    இதில் வனத்துறை பணியாளர்கள் சுமார் 120 பேர் ஈடுபடுகின்றனர். கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளவர்களுக்கான பயிற்சி முண்டந்துறை வனச்சரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    பயிற்சியில் அம்பை, பாபநாசம், முண்டந்துறை மற்றும் கடையம் வனச்சரகத்தை சேர்ந்த வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியை தொடர்ந்து 4 வனச்சரகத்திற்குட்பட்ட 31 பீட் பகுதியில் இன்று முதல் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர்.

    வருகிற 16-ந்தேதி வரை நடக்கும் கணக்கெடுப்பில் சேகரிக்கும் வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் ஆகியவற்றைக் கொண்டு வன உயிரிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். செல்போன் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு பணி குறித்து உயிரியலாளர் ஸ்ரீதர் மற்றும் ஆக்னஸ் பயிற்சியளித்தனர்.

    இதில் வனச்சரகர்கள் ஸ்டாலின், கருணாமூர்த்தி, கல்யாணி, நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×